கைது விடயம் மன்னரின் சூழ்ச்சியா? பின்னணி தகவல்கள் வெளியாகின!

Friday, November 10th, 2017

11 மூத்த இளவரசர்கள் கைது நடவடிக்கையின் பின்னால் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் சூழ்ச்சி என சர்ச்சை கிளம்பியுள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை, மன்னர் சல்மான் பின் அப்துலஜீஸ் அல் சவுதால் அமர்த்தப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையம், உருவான சில மணி நேரங்களில் அதிரடி கைது நடவடிக்கை மேற்கொண்டது.

இதில், சவுதி அரேபியாவின் 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பெருந்தொழில் அதிபர்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் (32) இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார்.கைது செய்யப்பட்டவர்களில் அல்-வலீத் பின் தலால் வளைகுடா நாடுகளின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் முக்கியமான தொழிலதிபர்.

சர்வதேச அளவில் ஆப்பிள், டுவிட்டர், சிட்டி குரூப் ஆப் ஹோட்டல்ஸ், உட்பட பல முக்கிய பெருநிறுவனங்களில் அதிக முதலீடு செய்திருக்கிறார் இளவரசரான அல்-வலீத் பின் தலால்.இவருடன் கைதானவர்களில் தேசிய அரசவை பாதுகாப்பு அமைச்சர் மித்தாப் பின் அப்துல்லா, திட்டம் மற்றும் பொருளாதாரத்தின் அமைச்சர் ஆதில் பகே மற்றும் சவுதியின் கப்பற்படை கமாண்டரான சுல்தான் பின் முகம்மது அல் சுல்தான் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இந்த கைது நடவடிக்கைகளின் பின்னணியில் மன்னர் சல்மான் பின் அப்துலஜீஸின் சூழ்ச்சி இருப்பதாக அதிர்ச்சி தகவல் பரவியுள்ளது.உலக இஸ்லாமிய நாடுகளில் நிலவி வரும் மன்னராட்சிகளில் இருந்து மாறுபட்டது சவுதி அரேபியா. அந்த நாட்டின் ஆட்சியாளர் குடும்பத்தினர் இடையே கடைபிடிக்கப்படும் ஜனநாயகம் அல்லது அரசாட்சி முறையால் சவுதி வேறுபடுகிறது.தந்தைக்கு பின் மகன், இவருக்கு பின் பேரன் என அரசர்கள் அமர்த்தப்படுவதில்லை. மாறாக அரசவை குடும்பத்தார் இடையே அடுத்த அரசர் யார் என ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு வருகிறார்.தற்போது இந்த ஜனநாயகத்தில் தனது நேரடிக் குடும்பத்தை மட்டும் ஆட்சி பொறுப்பில் அமர்த்தும் பொருட்டு மன்னர் சல்மான் கைது நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

Related posts: