நிதிஷ் குமாரின் பதவி ஏற்புடையதல்ல: மனுவை ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம்!

Wednesday, August 2nd, 2017

குற்றவியல் வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சட்டமன்ற மேலவைக்கு தெரிவு செய்யப்பட்டதை ஏற்கமுடியாது என முன்வைக்கப்பட்ட மனு உச்ச நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பீகார் மாநிலத்தில் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சீதாராம் சிங் உயிரிழந்தார். அத்துடன் நால்வர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் தற்போதைய பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் தொடர்பிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையிலுள்ளது. இந்நிலையில், நிதிஷ் குமார் மீது குற்றவியல் வழக்கு நிலுவையிலுள்ளதால் பீகார் மாநில மேல்சபை உறுப்பினராக அவர் வகிக்கும் பதவியை இரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவரால் உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Related posts: