அமெரிக்காவின் கறுப்பின பெண் நீதிபதி மர்ம மரணம்!

Friday, April 14th, 2017

அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி மற்றும் கறுப்பின நீதிபதி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஷீலா அப்துஸ் சலாம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என அமெரிக்கத் செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூயோர்க்கின், ட்ரெயில்பேளசிங் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த ஷீலா அப்துஸ் சலாம், கடந்த வாரத்தில் காணாமல் போன இவரை பொலிஸார தேடி வந்த நிலையில், புதன்கிழமை மதியம் 1.45 மணியளவில் அவரது உடல் ஹட்சன் ஆற்றில் கரை ஒதுங்குவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு விரைந்த பொலிஸார், நீதிபதி ஷீலா அப்துள் சலாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை. குறித்த மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும், இது கொலையா? விபத்தா என்னும் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் ஒரு வாரமாக காணாமல் போயிருந்தார்.

அவர் காணாமல் போயிருந்தார் என்று பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட தகவலையடுத்து ஒரு வாரமாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்தனர். இந்நிலையில் தான் அவரின் சடலம் ஹட்சன் ஆற்றில் கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து நியூயோர்க் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: