கொரோனா தடுப்பூசியில் முன்னேற்றம் – குரங்குகளுக்கு மேற்கொண்ட சோதனை வெற்றி!

Saturday, May 16th, 2020

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கி குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பாதகமான விளைவுகளின் அறிகுறிகள் எதுவும் தெரியவரவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சேதம் அடைவதை இந்த தடுப்பூசி தடுக்கக்கூடியதாக அமையும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட குரங்குகளின் மூச்சுக்குழாய் அழற்சி திரவம் மற்றும் சுவாசக்குழாய் திசுக்களில் கொரோனா வைரஸ் குறைந்ததைக் காண முடிந்தது, மேலும் நிமோனியாவும் வரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்று வெளிப்பாடுக்கு ஆளான பின்னர் 6 குரங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில், அந்த குரங்குகளுக்கு வைரஸ் இல்லை என தெரிய வந்தது. அவற்றுக்கு தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டதற்கு அறிகுறி எதுவும் இல்லை.

தற்போது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிற தடுப்பூசிக்கான ஊக்கம் அளிக்கிற அறிகுறிகளாக இது பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி பயனுள்ளதாக இருக்குமா? என்பதை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்

Related posts: