கொரோனா: ஈஸ்டர் வார இறுதியில் உச்சக்கட்டத்தை எட்டலாம் – இங்கிலாந்தின் சுகாதார செயலாளர்!

Saturday, April 4th, 2020

இங்கிலாந்தில் எதிர்வரும் ஈஸ்டர் வார இறுதியில் கொரோனா வைரஸ் உச்சக்கட்டத்தை எட்டக் கூடும் எனவும் ஏப்ரல் 12 ஆம் ஞாயிற்றுக் கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படலாம் எனவும் சுகாதார செயலாளர் மாட் ஹென்குக் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 569 ஆக இருந்த இறப்பு அடுத்த வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரிப்பது சாத்தியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களை சோதனை திறனை இந்த மாத இறுதிக்குள் ஒரு லட்சமாக அதிகரிக்க உள்ளதாக ஹென்குக் இன்று குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசாங்கம் இதுவரை வைரஸை கட்டுப்படுத்தக் கூடிய நம்பகமாக பரிசோதனை முறையை கண்டறியவில்லை.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகள் துரிதமாக அதிகரித்து வருகின்றன. அரசாங்கம் அதற்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது எனவும் சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் 33 ஆயிரத்து 718 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 2 ஆயிரத்து 921 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts: