கிரேக்கம் மற்றும் பல்கேரியாவுக்கு ஐரோப்பிய ஆணைக்குழு நிதியுதவி!
Wednesday, February 8th, 2017
அதிகரித்த குடியேற்றவாசிகளின் வருகையால் அவதியுற்றிருக்கும் கிரேக்கம் மற்றும் பல்கேரியாவுக்கு ஐரோப்பிய ஆணைக்குழு நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளது. குறித்த நிதியுதவியின் படி, கிரேக்கத்திற்கு 3.9 மில்லியனும் பல்கேரியாவுக்கு 6.1 மில்லியனும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவி தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஆணைக்குழு, கிரேக்கத்திற்கு வழங்கப்படவுள்ள நிதியுதவி அங்குள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளுக்கு உதவ பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. அத்துடன் பல்கேரியாவுக்கு வழங்கவுள்ள நிதி அங்குள்ள குடியேற்றவாசிகளின் முகாமையின் பொருட்டு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது

Related posts:
ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றி!
இரகசிய புலனாய்வு நடவடிக்கை மூலம் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு கைது!
அமுலுக்கு வந்தது புதிய தடை சட்டம்!
|
|
|


