காஷ்மீர் மாநிலத்துக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சி- இந்தியா குற்றச்சாட்டு

Sunday, August 6th, 2017

காஷ்மீர் மாநிலத்துக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சிகளை பாகிஸ்தான் அதிகரித்துள்ளதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி, பாகிஸ்தான் கடந்த ஆண்டு 228 முறை தாக்குதல்களை நடத்திய நிலையில், இந்த ஆண்டு இதுவரையில் 285 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக அருன் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்ஓசி பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலை கண்காணிப்பதற்கு ரேடார், சென்சார், தெர்மல் இமேஜர் உள்ளிட்ட கருவிகள் பயன்படுத்தப்படுவதாக தெரிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, இந்திய சீன எல்லை பிரச்சினையை தீர்க்கும் வகையில் செயற்பட்டுவரும் நிலையில் தமது பொறுமைக்கும் எல்லைகள் உள்ளதாக  சீனா எச்சரித்துள்ளது

இந்தியா – சீனா – பூடான் ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் டோக்லாம் எல்லைப் பகுதியில், கடந்த ஜுன் மாதம் 16-ம் திகதி வீதியொன்றை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டிருந்தது

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய வீரர்கள் அந்த பணிகளை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதனால் சிக்கிம் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் படைகளை மீளழைத்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சீனா தெரிவித்திருந்த நிலையில், இந்திய மத்திய அரசு அதனை பொருட்படுத்தாத நிலையில் சீனா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது

Related posts: