அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பனிப்புயல் உருவாகும் அபாயம்!

Saturday, March 2nd, 2024

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் பெரும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக யோசெமிட்டி தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்தப் பகுதிகளில் 10 அடி வரை பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் நெவாடா மலைப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 225 கிலோமீட்டர் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

கைகலப்புக் காரணமாகத்தான் சிறை வாகனம் சேதமடைந்தது - சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மது அருந்தச் சென்றனர்...
இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்க...
உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க சர்வஜன வாக்கெடுப்பு - புடினின் ப...