இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஐந்து வருட விசா – அமைச்சர் தம்மிக்க பெரேரா தகவல்!
Friday, July 1st, 2022
இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஐந்து வருட வேலை விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தம்மிக்க பெரேரா இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்துடன் குறித்த நடவடிக்கை இன்றுமுதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உயர் முகாமையாளர்களுக்கு விசா வழங்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
000
Related posts:
மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை - மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச...
அரசாங்க வளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன - பஃவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு...
டக்ளஸ் தேவானந்தாவின் கொள்கைகளின் பின்னால் மக்கள் அணிதிரண்டால் அனைத்தும் சாத்தியமாகும் – ஈ.பி.டி.பிய...
|
|
|


