அமெரிக்காவில் அவசர நிலைமையைப் பிரகடனப்படுத்த திட்டம்!

Friday, February 15th, 2019

அமெரிக்காவில் தேசிய அவசரநிலைமையைப் பிரகடனப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மெக்சிகோ – அமெரிக்க எல்லைச் சுவரை நிர்மாணிப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க அரச நிர்வாக ஸ்தம்பிப்பை தடுப்பதற்காக அவர் எல்லைப் பாதுகாப்பு சட்ட மூலத்தில் கைச்சாத்திடுவார்.

ஆயினும் காங்கிரஸ் சபையை புறக்கணித்து இராணுவ நிதியில் இருந்து எல்லைச் சுவர் நிர்மாணத்துக்கான நிதியை ஒதுக்குவதற்காக அவசர நிலைமையையும் பிரகடனப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: