கான்பூர் புகையிரத விபத்தில்: உயிரிழப்பு 128ஆக உயர்வு!

Monday, November 21st, 2016

பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் புகையிரதம் கான்பூர் அருகே நேற்று அதிகாலை தடம் புரண்டதில் இது வரை 128 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் கான்பூர் உயர் போலிஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ.செய்தி நிறுவனம் கூறியது.

காயமடைந்தவர்களில் 76 பேர் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லக்னோ, மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் மஹாராஷ்டிராவை இணைக்கும் இந்தப் பாதை ஒற்றை புகையிரத பாதையாக இருப்பதால் பல ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று  நான்கு முறை அதிர்ந்த ரயில் — பயணி பேட்டி விபத்துக்குள்ளான புகையிரதத்தில் பயணம் செய்த , கிருஷ்ண கேஷவ் என்பவர் , விபத்து நடந்த போது மூன்று நான்கு முறை பெரும் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததாகக் கூறியுள்ளார்

நான் எஸ்-12 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன், அப்போது காலை சுமார் 3 மணி இருக்கும்., நான் விழித்துக்கொண்டேன். . எங்கும் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ஆனால் எங்கள் பெட்டியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை“ என்றார் அவர்.

மேலும் கூறிய கிருஷ்ண கேஷவ், “நாங்கள் எல்லோரும் பெட்டியில் இருந்து இறங்கினோம். வெளியே ஒரே கும்மிருட்டாக இருந்த்து. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டிருந்ததையும், சில பெட்டிகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டிருந்ததையும் பார்த்தோம்“, என்றார்.

` அக்கம்பக்கத்திலிள்ள கிராமங்களிலிருந்து பலர் வந்து சிக்கிக்கொண்ட பயணிகளை வெளியே கொண்டுவர உதவினர்,“ என்றார் கேஷவ்.

“போலிஸார் ஒரு மணி நேரத்துக்குப் பின் தான் வந்தனர். ஆம்புலன்ஸ்கள் வந்தன . ஆனால் எங்களுக்கு மேலும் உதவி வேண்டும்“ என்றார் கேஷவ்.

_92567210_kanpur1

Related posts: