காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் கார் : விரைவில் விற்பனைக்கு!

Friday, February 24th, 2017

அழுத்தப்பட்ட காற்றினை எரிபொருளாகக் கொண்டு டாடா நிறுவனம் வடிவமைத்துள்ள எயார்பொட் (Airpod) வகை கார்கள் வரும் 2020 ஆம் ஆண்டு விற்பனைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பெற்றோல், டீசலுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயங்கும் கார்கள் உருவாக்கம் குறித்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வுகள் நடந்துவருகிறது.

பெற்றோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் பேட்டரிகார்களே இதுவரை முன்னிறுத்தப்பட்டு வந்தன.

எயார்பொட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தவகை கார்களின் முதற்கட்ட சோதனைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்தது. இதனால் எயார்பொட் வகைகார்களை வரும் 2020 ஆம் ஆண்டளவில் விற்பனைக்குக் கொண்டுவர டாடா நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

tata-air-car-main_650x421_41423048090

Related posts: