காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே குண்டு வெடிப்பு!

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் அலுவலகம் அருகே சக்தி குறைந்த வெடி குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு பிர்த்நகர் உள்ள இந்திய தூதரகத்தின் முகாம் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகம் அருகே சக்தி குறைந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் வெடி குண்டை வைத்துவிட்டு சென்றதாக நேபாள நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தமிழக மீனவர்கள் கண்டனம்!
சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் உலகின் மிகப்பெரிய புகையிரத நிலையம் அமைக்க சீனா திட்டம்!
அஸ்ட்ராசெனெகாவை பெற்றவர்களுக்கு இரண்டாவது செலுத்துகையாக பைஸர் தடுப்பூசியை செலுத்த முடியும் - உலக சுக...
|
|