சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் உலகின் மிகப்பெரிய புகையிரத நிலையம் அமைக்க சீனா திட்டம்!

Sunday, October 2nd, 2016

உலகிலேயே மிகப்பெரிய புகையிரத நிலையத்தை உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சுற்றலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது இதை காண்பதற்கு ஒரு நாளில் 30,000 மக்கள் வந்து செல்கின்றனர்.

2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ஒட்டி இந்த புதிய ரயில் நிலைய பணிகள் நடைபெற உள்ளது.ஜங்ஜாகூ நகரத்தை, பீஜிங்குடன் இணைக்கும் விதத்தில் உலக பாரம்பரியம் சின்னத்தை சேதப்படுத்தாத வண்ணம் இந்த ரயில் நிலையம் நிலத்துக்கு அடியில் மிக ஆழமாக கட்டப்படவுள்ளது.

இந்த புதிய ரயில் நிலையம் சீன பெருஞ்சுவரின் மேற்பரப்பிலிருந்து 335 அடிக்கு கீழே உருவாக்கப்படவுள்ளது.இந்த புதிய ரயில் நிலையம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரங்களை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளன, மேலும் இந்த ரயில் நிலையம் சீனாவின் தொன்மையான அடையாளமாக கருதப்படும் சீன பெருஞ் சுவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணமே உருவாக்கப்படவுள்ளது’ என சீனா தெரிவித்துள்ளது.

Great-Wall-of-China_02

Related posts: