காணாமல்போன அணு குண்டை தேடும் கனேடிய கடற்படை!

பனிப்போர் காலத்தில் காணாமல்போன அமெரிக்க அணு குண்டென்று நம்பப்படும் ஒரு மர்மப் பொருள் பற்றி அய்வு நடத்த கனடா கடற்படை கப்பல் ஒன்று விரைந்துள்ளது.
பிரித்தானியா கொலம்பியாவுக்கு அருகில் உள்ள கடலில் மர்மப் பொருள் ஒன்று இருப்பது குறித்து தனியார் சுழியோடி ஒருவர் கனடா இராணுவத்தை அறிவுறுத்தியுள்ளார். அந்த மர்மப் பொருளில் பறக்கும் சிறகுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
இந்த பகுதியில் 1950 ஆம் ஆண்டு விழுந்து காணாமல்போன அமெரிக்காவின் அணு குண்டாக இது இருக்க முடியும் என்று கனடா தேசிய பாதுகாப்பு திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதில் இயங்கும் அணுப் பொருட்கள் கொண்டிருக்காது என்று கனடா அரசு நம்புகிறது.
1950 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி அலஸ்காவில் இருந்து டெக்சாஸ் நோக்கி அணு குண்டுடன் சென்றுகொண்டிருந்த அமெரிக்க விமானமே வடக்கு பிரிட்டிஷ் கொலம்பிய கடலில் விழுந்தது. வரலாற்றில் அணு குண்டு காணாமல்போன முதல் சந்தர்ப்பமாக இது இருந்தது.
எனினும் குறித்த மார்க் நான்கு அணு குண்டில் யுரேனியம் மற்றும் டி.என்.டி நிரப்பப்பட்டபோதும் அணு குண்டொன்று வெடிப்புக்கு தேவையான புளூட்டோனியம் இணைக்கப்பட்டிருக்கவில்லை.
Related posts:
|
|