100 டொலர் நோட்டுகளை திரும்பப் பெற அவுஸ்திரேலியா முடிவு?

Tuesday, November 15th, 2016

இந்தியாவை போன்று அவுஸ்திரேலியாவிலும் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அதிரடி நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனை அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வரவேற்றாலும் மக்கள் பணத்தை மாற்ற திண்டாடுகின்றனர். இதேபோன்று அவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அவுஸ்திரேலியாவில் முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிமாற்றத்தை அதிகரிக்கவும், வங்கிகளில் மக்கள் காத்து கிடப்பதை தடுக்கவும் 100 டாலர் நோட்டை வாபஸ் பெறலாம்.

இதனால் வங்கிகளுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதுடன், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் வெளிவரும்.வரி மூலம் கிடைக்கும் வருமானம் உயரும், நலத்திட்ட மோசடிகள் தடுக்கப்படும். கடந்த 2009ம் ஆண்டில் ஏடிஎம்-மில் 3.4 சதவீதம் குறைந்த நிலையில், கிரடிட் கார்டு மூலமான பரிமாற்றம் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே நோட்டுகளை வாபஸ் பெறுவதால் பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100AUDr

Related posts: