ஏழு நாள் போர் நிறுத்தம் நிறைவு – இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் மோதல் ஆரம்பம்!
Friday, December 1st, 2023
ஏழு நாள் போர் நிறுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காஸாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அந்த ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று (30) வரை இஸ்ரேலால் கடத்தப்பட்ட 110 பணயக்கைதிகளும், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 240 பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காஸா பகுதியில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
Related posts:
கடந்தகால தவறுகளே இன்றைய பிரச்சினைகளுக்கு காரணம் - வடக்கின் ஆளுநர்!
மிடாக் புயல் - தென்கொரியாவில் 06 பேர் உயிரிழப்பு!
இந்திய இழுவைப் படகுகளின் எல்லைதாண்டும் அத்துமீறலை கண்டித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தீவக கடற...
|
|
|


