கவுதமாலாவில் கோர விபத்து – 30 பேர் பலி!
Friday, March 29th, 2019
கவுதமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
வேக கட்டுப்பாட்டினை இழந்து குறித்த பாரவூர்தி பொதுமக்கள் மீது மோதுண்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த அனர்த்தம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த நாட்டு ஜனாதிபதி ஜிம்மி மொரால்ஸ், குறித்த சம்பவம் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள அவர், அவர்களது குடும்பங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த அனர்த்தத்தை அடுத்து கவுதமாலாவில் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
இரண்டாவது பெண் பிரதமராக தெரேஸா மே இன்று பதவியேற்பு!
காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
சில மாதங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் - உலக சுகாதார ஸ்தாபனம்!
|
|
|


