சோதனையை நிறுத்த மாட்டோம் -வட கொரியா !

Saturday, April 29th, 2017

ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அணு ஆயுத பரிசோதனைகளை நிறுத்த முடியாது என பகிரங்கமாக அறிவித்துள்ளது வட கொரியா.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளை செய்து வருவதால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வல்லரசு நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வட கொரிய உயர் ராணுவ அதிகாரியான Sok Chol Won என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘எங்களுடைய நாட்டின் ராணுவ பலத்தை அதிகரித்துக்கொள்ள அணுகுண்டு மற்றும் ஏவுகணை பரிசோதனை மிக முக்கியமானது.இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இதனை நிறுத்த முடியாது.

அமெரிக்காவின் பாசங்குத்தனமான வார்த்தைகளை நம்பி உலக நாடுகள் வட கொரியாவிற்கு எதிரான செயலில் இறங்குவது கண்டிக்கத்தக்கது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் சூழல் குறித்து அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் நேற்று பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், ‘கடந்த 2011-ம் ஆண்டு கிம் யோங் அன்னின் தந்தை உயிரிழந்ததும் 27 வயதான கிம் அரசாங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இவ்வளவு சிறிய வயதில் ஒரு நாட்டை தலைமை தாங்குவது சரியாக இருக்காது. வட கொரியாவுடன் நிச்சயமாக மோதல் ஏற்படும்’ என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதே போல், அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்த கேப்டன் ஒருவர் பேசுகையில், ‘வட கொரியாவில் இவ்வளவு மோசமான ஒரு அசாதாரண சூழலை நான் இதுவரை பார்க்கவில்லை.இப்பிரச்சனையை அமெரிக்கா கவனமாக கவனிக்காவிட்டால் அமெரிக்கா மீது வட கொரியா தாக்குதல் நடத்துவதை தவிர்க்க முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts: