கனடா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தை நிராகரிக்கும் பெல்ஜியம்!

Tuesday, October 25th, 2016

கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது என பெல்ஜியம் தெரிவித்துள்ளது.

பெல்ஜியத்தின் மூன்று பிராந்தியங்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க கடைசி நாளான இன்றும், ஒப்புதல் தர மறுப்பு தெரிவித்ததையடுத்து பெல்ஜியம் இவ்வாறு தெரிவித்துள்ளது. பெல்ஜியத்தில் பிரஞ்சு மொழி பேசும் சமூகம் உட்பட, சோசியலிஸ்ட் கட்சியால் ஆட்சி செய்யப்படும் இந்த பிராந்தியங்கள் அனைவரும் சீட்டா என்று அழைக்கப்படும் அந்த ஒப்பந்தத்தில் உள்ள வாசகங்களை படிக்க இன்னும் கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளனர்.

இந்த ஒப்பந்தம், அமெரிக்கா மற்றும் சீனாவுடன் பெரிய ஒப்பந்தங்கள் ஏற்பட வழிவகுக்கும் என்பதால் அது சரியாக அமைய வேண்டும் என்று அந்தப் பிராந்தியங்கள் தெரிவித்துள்ளனர். ஏழு வருட காலம் பேச்சுவார்த்தைக்குப் பின் உருவான இந்த ஒப்பந்தத்திற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வரும் திங்கட்கிழமைக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து பெல்ஜியம் முடிவு செய்ய வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

_92074108_gettyimages-617674550

Related posts: