அமெரிக்கா முழுவதும் அவசரகாலநிலை பிரகடனம் – அனுமதி வழங்கினார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

Monday, April 13th, 2020

அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களுக்குமான அவசரகால நிலை பிரகடனத்திற்கான அறிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளார்.

அமெரிகாவில் உள்ள 50 மாநிலங்களுக்கும் அவசரகால நிலை பிரகடனப்படுத்துவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மாநிலங்கள் தவிர்நத ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தீவுகளிலும் இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே அமெரிக்காவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்த ஆபத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்நாட்டு உளவுத்துறையும், சுகாதாரத்துறையும் பலமுறை எச்சரித்தும், அதைப் பொருட்டாக மதிக்காமல் பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செயல்பட்டமையாலேயே இந்த அவலம் ஏற்பட காரணம் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் குற்றம் சாட்டுகின்றன.

ஆனால், கொரோனாவில் தற்போது மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதைப் பார்க்கும்போது, அதற்கு சீனாதான் காரணம் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: