கடினமான வழிமுறை மூலம் வெற்றிகளைச் சுலபமாகப் பெற்று வருகின்றோம் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Friday, February 17th, 2017

இணக்க அரசியல் நடத்தவதென்பது மிகவும் கடினமானது  என்றும் ஆனாலும் அதன்மூலமே அனைத்தையும் சுலபமாக வெற்றிகொள்ளமுடிகிறது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் அமைந்துள்ள கட்சியின் பிரதேச அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற காரைநகர் பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எதிர்ப்பு அரசியலை நடத்தவது மிகவும் சுலபமானது. அதன்மூலம் வெறுமனே உணர்ச்சி கொப்பளிக்கப் பேசவேண்டியது ஒன்றுதான் மிச்சம். எதையும் மக்களுக்கு அதன்மூலம் பெற்றுக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியவையையும் அதற்கான பொறிமுறைகளையும் மறந்துவிட்டு அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது என்று மக்களுக்கு பொய்யுரைப்பது ஒன்றுதான் சிலரது எதிர்ப்பு அரசியலின் மாய மந்திரம்.

ஆனாலும் இணக்க அரசியல் என்பது அவ்வாறானது அல்ல. அதன்மூலம் எதையாவது மக்களுக்கு பெற்றுக்கொடுத்தே ஆகவேண்டும். அவ்வாறு நாம் முன்னெடுத்துவரும் இணக்க அரசியல் மூலம் எமது மக்களுக்கு பாரிய பணிகளை நாம் ஆற்றியதன் மூலம் இணக்க அரசியலின் மகத்துவத்தை நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

இணக்க அரசியல் மூலம் வெற்றிகளைப் பெறுவதாக இருந்தால் அதற்கு அரசியல் பலம் தேவை. அந்த அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் இருக்கின்றது.

ஆனாலும் நாம் குறைந்தபட்ச அரசியல் பலத்தைக்கொண்டு இணக்க அரசியலை நடத்தி கணிசமான வெற்றிகளை கண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது மதிநூட்ப சிந்தனையின் வழிநின்று இணக்க அரசியல் மூலம் பெற்றுக்கொடுத்தவைகளில் ஒரு கடுகளவேனும் எதிர்ப்பு அரசியல் நடத்தியவர்கள் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை. இதுவே வரலாறு என்றும் தெரிவித்தார்.

கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணன் (ரஜனி) தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன்  உடனிருந்தனர்.

0101

Related posts: