ஈரானுக்கு ஏவுகணைகள் ஏற்றுமதி மூன்றாம் உலகப் போருக்கு தயாராகும் வடகொரியா?

Friday, January 26th, 2018

ஈரானுக்குக் கப்பல்கள் மூலம் கள்ளத்தனமாக வடகொரியா ஏவுகணைகள் ஏற்றுமதி செய்யும் கிம் ஜாங் உன்னின் செயல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகை செய்யும் என அணு ஆயத வல்லுநர் கோர்டான் சங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் கண்டனங்களைப் புறம் தள்ளி ஏவுகணை மற்றும் அணு ஆயுதப் பரிசோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் மீது ஐ.நா சபை பல்வேறு தடைகளை விதித்தது. தற்போது கள்ளத்தனமாக ஈரானுக்கு ஏவுகணைகளை வட கொரியா வழங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நியூக்கிளியர் ட்டவுன் என்ற புத்தகத்தின் ஆசிரியரும் கிழக்காசிய நாடுகளில் அணு ஆயுத நடவடிக்கைகளை கண்காணித்து கோர்டான்சங் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த எக்ஸ்பிரஸ் இணையத் தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் ஈரானுக்கு கப்பல்கள் மூலமாக வடகொரியா கள்ளத்தனமாக ஏவுகணைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதனை அமெரிக்கா தடுக்க வேண்டும். இதனை நாம் அனுமதிக்கக் கூடாது. இதை அனுமதித்தால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகை செய்யும். ஐ.நா தனது விதிமுறைகளை செயற்படுத்தாவிட்டாலும் அமெரிக்கா செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் வட கொரியக் கப்பல்கள் அதன் கடல் எல்லையில் ஆயுதங்களை விற்பனை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

Related posts: