ஆலயங்கள் மத வழிபாட்டுத்தளங்கள் திறப்பு!

Monday, July 5th, 2021

தமிழகத்தில் சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் , பழனி முருகன் ஆலயம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்கள் திறக்கப்பட்டன.

இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டன.

அதே வேளையில் ஆலயங்களை திறந்து அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று ஆகம விதிப்படி, வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இன்று (05)  (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதிகாலையிலேயே ஆலயங்களில் திரண்ட திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

Related posts: