காசாவுக்கான முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது பதிலை வழங்கியது ஹமாஸ் !

Wednesday, February 7th, 2024

பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் செவ்வாயன்று காசாவுக்கான முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது பதிலை வழங்கியதாகக் கூறியது.

அதில் பணயக்கைதிகளை விடுவிப்பதும் அடங்கும், மேலும் ஒப்பந்தம் எட்டப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் செவ்வாயன்று தாமதமாக ஹமாஸின் பதில் விவரங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளால் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுகின்றன என்று கூறியது.

மத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஹமாஸ் பதிலை வொஷிங்டன் மதிப்பாய்வு செய்து வருவதாகவும், புதன் கிழமை நாட்டிற்கு வரும்போது இஸ்ரேலிய அதிகாரிகளுடன் விவாதிப்பதாகவும் கூறினார்.

எவ்வாறெனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒப்பந்தத்தின் சில நகர்வுகளை ஏற்றுக் கொண்ட போதிலும், ஹமாஸின் சில கோரிக்கை ‘ சற்று அதிகமானவை’ என்று மறைமுகமாக விவரித்துள்ளார்.

எனினும் தற்போது பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அவர் வொஷிங்டனில் கூறினார்.

இந்த முன்மொழிவை நேர்மறையான உணர்வோடு கையாண்டோம், ஒரு விரிவான மற்றும் முழுமையான போர்நிறுத்தத்தை உறுதி செய்தோம், எங்கள் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தோம், நிவாரணம், தங்குமிடம் மற்றும் புனரமைப்பு ஆகியவற்றை உறுதி செய்தோம், காசா பகுதியில் முற்றுகையை நீக்கி சாதிக்கிறோம்.

எனினும் போர் மற்றும் இஸ்ரேலியப் படைகள் காசாவை விட்டு வெளியேறும் என்ற உத்தரவாதம் இல்லாமல் பணயக்கைதிகளை விடுவிக்க அனுமதிக்காது என்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய இயக்கம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: