அழியுமா வடகொரியா ?

Wednesday, September 20th, 2017

அமெரிக்காவை மிரட்டினால், வடகொரியாவை முற்றிலும் அழிப்பதை தவிர்த்து எங்களுக்கு வேறு வழி இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ஐ.நா. சபையில் இன்றைய தினம் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடகொரியா ஐ.நா. சபையின் கடினமான பொருளாதார தடைகள் மற்றும் உலக நாடுகளின் கண்டனங்களை மீறி தொடர்ந்து அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.முதல் உரையிலேயே எப்போதும்போல அவருடைய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது வடகொரியாவிற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியாவின் பொறுப்பற்ற அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஒட்டுமொத்த உலகத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.வடகொரியாவின் இந்த செயல்கள் தன்னையும் மற்றும் தன்னுடைய பிராந்தியத்தையும் அழித்துக்கொள்வதற்கு வழிவகுக்கும். அமெரிக்காவை மிரட்டினால், வடகொரியாவை முற்றிலும் அழிப்பதை தவிர்த்து எங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.வடகொரியாவை முற்றிலும் அழிக்கவும் முடியும், அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால் அது தேவையாக இருக்காது என நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அணு ஆயுத திட்டங்களை கைவிடுவது மட்டும்தான் வருங்காலங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடியது, இது வடகொரியா நல்ல முடிவெடுப்பதற்கான நேரமாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.இதேவேளை, அவரது உரை குறித்து வடகொரியா எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும், ஈரான், வெனிசுலா மற்றும் கியூபா அரசுகளையும், இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தாக்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: