கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா!

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த ஏவுகணை ஜப்பானிய கடற்பகுதியில் வீழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் அமெரிக்க உளவு விமானம் ஊடுருவியதாக வடகொரியா குற்றஞ்சாட்டிய நிலையில், இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமது எல்லைக்குள் அத்துமீறும் அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் கடந்த வாரத்தில் வடகொரியா எச்சரித்திருந்தது.
எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுகளை வொஷிங்டன் நிராகரித்துள்ளதுடன், தமது இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு இணங்குவதாகவும் கூறியுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கைக்கு பிறகு இந்த ஆண்டு கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பு பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
இந்தநிலையில், அமெரிக்காவும் தென் கொரியாவும் அந்தப்பகுதியில் கூட்டு இராணுவ பயிற்சிகளை அதிகரித்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|