வடகொரியாவில் நில அதிர்வு! ஹைட்ரஜன் குண்டு சோதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்!

Sunday, September 3rd, 2017

வடகொரியாவில் 6.3 ரிக்டர் அளவில் பாரிய அதிர்வு தன்மை ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தை மேற்கோள்காட்டி  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அதிர்வு வடகொரியாவில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஏவுகணை சோதனையின் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஹைட்ரஜன் குண்டு என கருதப்படுகின்ற பெலிஸ்டிக் ஏவுகணைகளை கையாளக்கூடிய மிகவும் மேம்பட்ட அணு ஆயுதம் ஒன்றை தாம் தயாரித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துவரகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: