ஐரோப்பா உறுதியாக வேண்டுமானால் பிரான்ஸ் – ஜேர்மனி திடமாக இருக்க வேண்டும் – ஜேர்மனிய அதிபர்!

Thursday, February 16th, 2017

 

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதி ரீதியில் நல்ல நிலையில் இருந்தாலேயே ஐரோப்பா உறுதியாக இருக்கும் என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெல் (Angela Merkel) தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் பிரதமர் பர்னார்ட் கெசினோவுடன் பர்லினில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தை வழிநடத்துவது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் கைகளிலேயே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்இ ‘ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் வர்த்தக ரீதியான உறவுகளின் மூலம் ஒன்றோடொன்று இணைந்து செயற்படுகின்றன. அதனால்இ பொருளாதார கொள்கை தொடர்பில் நாம் எங்களது கருத்துக்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொள்வோம். இந்த இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருந்தாலேயே ஐரோப்பாவும் நல்ல நிலையில் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த பர்னார்ட் கசினோவ் “குடியேற்றவாசிகளின் அதிகரித்த வருகை மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டுமாயின் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய இரு நாடுகள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமே” என தெரிவித்துள்ளார்.

Angela-Merkel-720x480-450x300

Related posts: