பாரீஸ் விமான நிலையத்தில் போலி துப்பாக்கியுடன் இருவர் கைது!
Thursday, December 27th, 2018
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள விமான நிலையத்தில் போலி துப்பாக்கியுடன் வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தில் 2 பேர் துப்பாக்கியுடன் வருவதாகக் கூறி, பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து, அங்கிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த 2 பேரையும் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் போலியானவை என்பது சோதனையில் தெரியவந்தது.
இதேவேளை, விமான நிலையத்தில் தனியாக இருந்த பையையும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
துருக்கி 3 ஆயிரம் இஸ்லாய தீவிரவாதிகளை கொன்றது?
விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் அதிகரித்து வருகின்றன - எச்சரிக்கும் ஐ.நா!
இந்தோனேஷியாவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்து ; 27 பேர் பலி!
|
|
|


