பூண்டோடு அழித்து விடுவோம் வட கொரியாவை மிரட்டும் தென் கொரியா!

Monday, September 12th, 2016

 

எதிர்வரும் காலங்களில் வட கொரியா அணு குண்டு தாக்குதல் நடத்த முன்வந்தால் அந்நாட்டின் தலைநகரை பூண்டோடு அழித்துவிடுவோம் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வட கொரியா தொடர் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 2006ம் ஆண்டுஇனி எவ்வித அணுகுண்டு பரிசோதனைகளை நடத்தக்கூடாதுஎன .நா சபை தடை விதித்தது.இதுமட்டுமில்லாமல், வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து .நா உத்தரவிட்டது.

எனினும், .நா சபையின் உத்தரவை மீறி வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.நேற்று முன் தினம் 5வது அணுகுண்டு பரிசோதனையை வட கொரியா வெற்றிகரமாக நிறைவேற்றி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வட கொரியாவின் இந்நடவடிக்கைக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், தென் கொரியா இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், அணுகுண்டு தாக்குதல் நடத்த வட கொரியா முயற்சி செய்தால், அடுத்த நிமிடமே அந்நாட்டின் தலைநகரான பியோங்யாங்கை முற்றிலுமாக அணுகுண்டு வீசி அழித்து விடுவோம்.

இது வெறும் அச்சுறுத்தல் அல்ல. வட கொரியா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் அந்நாட்டின் தலைநகர் உலக வரைப்படத்தில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்படும்என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

corea-680x365

Related posts: