304 பேரை பலிகொண்ட மூழ்கிய கப்பல் கடற்படுக்கையிலிருந்து அகற்றப்பட்டது!

Monday, March 27th, 2017

தென் கொரியாவின் உயிரிழப்புக் கொண்ட அனர்த்தத்திற்கு காரணமான மூழ்கிய கப்பல் கடல் படுக்கையில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு பின் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

செவொல் என்ற அந்தக் கப்பல் 2014 ஏப்ரல், 16 ஆம் திகதி தென்மேற்கு தீவான ஜின்டோவுக்கு அருகில் மூழ்கியபோது அதில் இருந்த 304 பேர் கொல்லப்பட்டனர். பெரும்பாலானோர் சுற்றுலா சென்ற பாடசாலை சிறுவர்களாவர்.

இந்த கப்பல் தற்போது மேலே எழுப்பப்பட்டு கரையை நோக்கி இழுத்து வரப்படுகிறது. இரண்டு வாரங்களில் கரையை அடையும் கப்பலை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பார்வையிட எதிர்பார்த்துள்ளனர்.

மூழ்கிய கப்பலுக்குள் தொடர்ந்தும் ஒன்பது சடலங்கள் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது. கப்பலை வெளியே கொண்டுவருவது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் முக்கிய கோரிக்கையாகும்.

எனினும் 6,825 தொன் கொண்ட கப்பலை மேலே எடுத்து வருவது அரசுக்கு பெரும் சவாலான ஒரு நடவடிக்கையாகும்.

கப்பலின் சட்டவிரோதமான மறு வடிவமைப்பு, அதிகம் பேரை ஏற்றியது, அனுபவமற்ற ஊழியர்கள், அரச நெறிமுறைகளை கடைப்பிக்காமை ஆகியவை கப்பல் மூழ்க காரணமாக கூறப்பட்டது.

Related posts: