சீனாவில் பரவிவரும் மற்றுமொரு அறியப்படாத புதிய நிமோனியா நோய் – ஊலக நாடுகள் அச்சம்!

Thursday, November 23rd, 2023

சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருகிறது.

பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளன.

வட சீனாவில் பரவி வரும் நோய் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள சிறுவர்களிடையே இந்த நிலை பொதுவாக காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிமோனியா நோய் தொற்று வட சீன குழந்தைகளிடையே பரவி வருவதாகவும், அதனை சீன அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும் தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

2019 ஆம் ஆண்டில், உலகின் முதல் அதிகாரப்பூர்வ கொவிட் நோயாளி சீனாவின் வுஹானில் இருந்து பதிவாகினார்.

வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் கொவிட் வைரஸை தயாரித்ததாகவும், அது பாதிக்கப்பட்ட நோயாளிகளை சிறிது காலம் மூடிமறைத்ததாகவும் சீனா குற்றம் சாட்டப்பட்டது, மேலும் இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்த வேண்டியிருந்தது.

கொவிட் ஒரு உலகளாவிய தொற்றுநோயாக பரவியுள்ளது மற்றும் இறப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்குகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: