கிரீஸுக்குள் அத்துமீறி நுழைந்ததாக துருக்கி வீரர்கள் மீது குற்றச்சாட்டு!

Monday, July 18th, 2016

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப்பின், துருக்கி ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கிரீஸுக்கு தப்பியோடிய 8 துருக்கி படையினர் மீது சட்ட விரோதமாக நாட்டிற்குள் நழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமான அதிகாரிகளுக்கு அபாய சமிக்ஞைகளை அனுப்பிய பிறகு, கிரீஸில் உள்ள அலெக்சாண்ட்ரூபோலிஸ் நகரில் துருக்கி படையினர் தரையிறங்கி உள்ளனர். இந்த எட்டு பேரும் கிரேக்க அரசு தரப்பு வழக்குரைஞர் முன் ஆஜரானார்கள்.

அவரும், கிரீஸிற்குள் சட்ட விரோதமாக ஹெலிகாப்டர் மூலம் நுழைந்ததாக குற்றம் சாட்டினார்.

துருக்கி போலிசார், படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் கிரீஸிற்கு வந்ததாகவும், தங்களுக்கும் துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எந்த தொடர்புமில்லை எனவும் கிரீஸிற்கு தஞ்சம் கோரி வந்த படையினரின் வழக்குரைஞர் கிரேக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அந்த எட்டு பேரையும் தங்களிடம் ஒப்படைக்க துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts: