பறவை மோதி விபத்து: வயலுக்குள் இறங்கிய விமானம் – 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி!

Saturday, August 17th, 2019

233 பயணிகளுடன் நடுவானில் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது பறவை மோதியதால் சோள வயலில் தரையிறக்கப்பட்டதால் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு Ural Airlines A321 ரகத்தை சேர்ந்த விமானம் மொஸ்கோ Zhukovsky விமான ஓடுபாதையில் ஓடி மேல் எழுந்து நடுவானுக்கு சென்று கொண்டிருந்தபோது விமானம் மீது பறவை ஒன்று மோதியுள்ளது.

விமான எஞ்சினில் பறவை மோதியதால், விமானம் உடனடியாக தடுமாறத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இதனை அவதானித்த விமானி டேமிர் யுசுபோ, விமானத்தை லாவகமாக கொண்டு சென்று,விமானத்தை உடனடியாக, மொஸ்கோ சோள வயல் ஒன்றின் அருகே கொண்டு சென்று தரயிறக்கியுள்ளார்.

இதன்பொது பெரும் சத்தம் ஒன்று கேட்டதையடுத்து விமான கதவு திறக்கப்பட்டதும் பயணிகள் பெரும் பதற்றத்துடன் வெளியேறிச் சென்றுள்ளனர்.

விமானம் வெடித்துச் சிதறாததால் அதில் இருந்த 233 பேரும் உயிர்பிழைத்தனர்.

விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் 23 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.இந்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகள் உயிரைக் காப்பாற்றிய விமானியை ரஷ்யா அரசு பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: