துருக்கி 3 ஆயிரம் இஸ்லாய தீவிரவாதிகளை கொன்றது?

Thursday, May 12th, 2016

சிரியா மற்றும் ஈராக்கில் 3 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகளை துருக்கி கொன்றுள்ளது என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் வெளிநாட்டு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில் 3 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகளை நாங்கள் கொன்று உள்ளோம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல் விவகாரத்திலும், உலகின் பிற பகுதிகளில் இருந்து இளைஞர்கள் எல்லை வழியாக (துருக்கி) ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்த விவகாரத்திலும் துருக்கியை முன்னதாக மேற்கத்திய நாடுகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

அமெரிக்காவுடன் கைகோர்த்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு துருக்கி முதலில் தயக்கம் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் உதவி அதிகம் தேவைப்படுகிறது என்று துருக்கி குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகள் மற்றும் பல வாரங்களாக ராக்கெட் வீச்சால் பாதிக்கப்பட்டு உள்ள துருக்கியின் கிலிஸ் பகுதியிலும் மேற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்பு தேவையென்று துருக்கி குறிப்பிட்டுள்ளது.

Related posts: