பிரெக்ஸிட் விவகாரம் – பிரிட்டன் வெளியேறுவதற்கான திகதியில் மாற்றம்!

Wednesday, October 30th, 2019


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான (பிரெக்ஸிட்) திகதியை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனால், முன்பு திட்டமிட்டபடி பிரிட்டன் வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் அந்த திகதிக்கு முன்பாகவே கூட பிரிட்டன் வெளியேறலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே, அதாவது டிசம்பர் 12 ஆம் திகதியே, பொதுத் தேர்தலை சந்திப்பதற்கான பிரதமர் போரிஸ் ஜான்சனின் முன்மொழிவின் மீது பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது.

இந்த மாத இறுதியில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது.

இந்நிலையில், பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்காததுடன், வெளியேறுவதற்கான திகதியை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரதமர் வேண்டுகோள் விடுப்பதை அவசியமாக்கும் வகையில் சட்டமும் இயற்றியது.

ஒப்பந்தம் போட்டுக்கொண்டோ அல்லது ஒப்பந்தம் இல்லாமலோ பிரிட்டன் நிச்சயம் அக்டோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து வந்த நிலையில், அவருக்கு பாராளுமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது

Related posts: