அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்

Tuesday, July 4th, 2017

வடக்கு அயர்லாந்தின் அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றின் கீழ்ச்சபையில் உள்ள உறுப்பினர்களுக்கு வடக்கு அயர்லாந்தின் மாநிலச் செயலாளர் ஜேம்ஸ் புரோக்கன்ஷியர் திங்கட்கிழமை விளக்கம் அளிக்கவுள்ள நிலையிலேயே மேற்படி அதிகார பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.இந்த விடயம் தொடர்பில் வடக்கு அயர்லாந்தின் முக்கிய இரு கட்சிகளான ஜனநாயக ஒன்றியக் கட்சி மற்றும் ஷென் பியென் ஆகியவற்றுக்கு இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எட்டப்படாமலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

இருப்பினும் அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்படிக்கை எட்டப்பட வேண்டும் என கடந்த வியாழக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடன்படிக்கை எட்டப்படாதிருப்பதற்கு ஜனநாயக ஒன்றியக் கட்சியின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என ஷென் பியென் கட்சியின் தலைவர் ஜெர்ரி அடம்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: