ரஷ்ய புகையிரதங்கள் இந்தியாவில் சேவை!

Tuesday, January 24th, 2017

ரஷ்யாவின் உதவியுடன் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக புகையிரதங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக முதல்கட்ட ஆய்வுவறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் திட்டமாக நாகபுரியில் இருந்து செகந்தராபாத் வரையிலான 575 கி.மீ. தொலைவுக்கு இந்த 200 கி.மீ. வேக புகையிரதங்களை இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இப்போது தயாரிக்கப்பட்டுவரும் புகையிரத பெட்டிகளும், அமைக்கப்படும் தண்டவாளங்களும் அதிவேகமாக புகையிரதங்களை இயக்குவதற்கு ஏற்ப இல்லை.
எனவே, ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் புகையிரத பெட்டிகளும், தண்டவாளங்களும் அமைக்கப்படவுள்ளன.

இது தொடர்பான திட்ட அறிக்கையும் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த புகையிரதங்களை இயக்குவதற்கு முன்பு புகையிரத வாரியத்தின் பல்வேறு பிரிவுகளையும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த வேண்டியுள்ளது.

அதிவேக புகையிரத தண்டவாளங்களின் குறுக்கே விலங்குகளும், மனிதர்களும் செல்லாதவாறு தடுக்க பாதையின் இரு பகுதியிலும் முழுமையாக கம்பி வேலி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த புகையிரதங்கள் செல்லும்போது அதிக ஓசை ஏற்படுத்தும். மக்கள் வசிக்கும் பகுதியை புகையிரதங்கள் கடக்கும்போது அதிக சப்தம் ஏற்படாமல் இருக்க ஒலி தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ரஷிய புகையிரத வாரியம் பரிந்துரை அளித்துள்ளது.

இந்த திட்டத்துக்கான செலவுகளை இந்தியாவும், ரஷியாவும் சமமாகப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. இந்தியாவில் இப்போதைய அதிவேக புகையிரதம் கதிமான் எக்ஸ்பிரஸ் என்பதாகும்.  இந்த புகையிரதம் ஒரு மணி நேரத்தில் 160 கி.மீ. தொலைவைக் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8732625862

Related posts: