ஐப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகினால் பிரித்தானியா பாதிக்கப்படும்!

Tuesday, June 7th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் பட்சத்தில் அதன் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என உலக வர்த்தக ஸ்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

உலக வர்த்தக ஸ்தாபனத்தின் விதிகள் ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பை சார்ந்ததாக உள்ளதாக பீற்றர் சதெர்லண்ட் சுட்டிக்காட்டியுள்ள அவர் குறிப்பாக பிரித்தானியாவின் உற்பத்தியாளர்கள் பாரிய சிக்கலை எதிர்கொள்வார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

சதெர்லாண்டின் அச்சம் தவறான ஒன்றென ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் பிரசாரம் செய்யும் உயர்மட்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

சதெர்லாண்ட் தமது சுயமான தீர்மானங்களை வெளியிடுவதாக குறித்த குழுவின் பொருளாதார நிபுணரான ஜெராட் லயன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற முடியும் என்பதே உண்மையான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் உலக வர்த்தக ஸ்தாபனத்தின் விதிகளின் பிரகாரம் சுதந்திர வர்த்தத்தை மேற்கொள்ள முடியும் எனவும் ஜெராட் லயன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான சர்வஜென வாக்கெடுப்பு எதிர்வரும் ஜுன் மாதம் 23 ஆம் திகதி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: