கொரோனா தொற்றால் திணறும் பிரேசிலில்: கடந்த 24 மணிநேரத்தில் 31 ஆயிரத்துக்கும் அதிகமானேகாருக்க தொற்று உறுதி!

Wednesday, June 10th, 2020

பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது சுமார் 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதற்கமைய அங்கு இதுவரையில் 40,883 பேர் இதுவரையில் கொவிட் 19 தொற்றின் காரணமாக மரணித்துள்ளனர்.

இதேபோல பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 2 இலட்சத்து 89,1402 வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல, கடந்த 24 மணித்தியாலத்தில் பிரேசிலில் 31,197 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு அங்கு இதுவரையில் 7 இலட்சத்து 42,084 பேர் குறித்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமெரிக்காவில் இதுவரையில் 20 இலட்சதது 45,549 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, அங்கு இதுவரையில் 1 இலட்சத்து 14,148 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: