ரஷ்ய ராஜதந்திரிகள் வெளியேற்றம்!

Tuesday, March 27th, 2018

அமெரிக்காவும், அமெரிக்கா சார்பான நாடுகளில் உள்ள ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றப்படுவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னர் எப்பொழுதும் இல்லாத வகையில் ஜேர்மனி, பிரான்ஸ், யுக்ரேன் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் தனது நாடுகளிலுள்ள ராஜதந்திரிகளை வெளியேற்றியுள்ளது. இப்படியான சீண்டும் தன்மைக்கு ரஷ்யா உரிய மாற்று நடவடிக்கையை எடுக்கும் என எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவில் செயற்பட்டு வந்த முன்னாள் ரஷ்ய உளவாளி நஞ்சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே இந்த நடவடிக்கைகளை அமெரிக்க சார்பான நாடுகள் மேற்கொண்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ள ரஷ்யா, தெற்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்துடன் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

Related posts: