ஆயர்களை நீக்க புதிய சட்டம்!

Sunday, June 5th, 2016

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை கையாளுவதில் ஆயர்கள் அலட்சியம் காட்டினால், அவர்களை நீக்கிவிடுவதற்கான புதிய சட்ட நடவடிக்கைகளை போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

குழந்தைகள் மீது பாலியல் இச்சை கொள்ளும் பாதிரியார்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தவறுவதற்கு ஆயர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டோர் நடத்திய நீண்ட பரப்புரைகளுக்கு பின்னர் போப் பிரான்சிஸின் இந்த ஆணை வந்துள்ளது.

அலட்சியம் காட்டினால் ஆயர்கள் நீக்கப்படுவதற்கு திருச்சபை சட்டம் ஏற்கனவே அனுமதிக்கிறது என்பதை போப் இந்த ஆணையில் ஒத்துக்கொண்டுள்ளார்.

ஆனால் பதவி நீக்குவதற்கு வழிகோலும் ‘ஆழமான காரணத்திற்கு‘ மேலும் துல்லியமான வரையறை இருக்க வேண்டுமென விரும்புவதாக இந்த ஆணையில் போப் தெரிவித்திருக்கிறார்.

160408161246_papa_francisco2_reuters_640x360_reuters_nocredit

Related posts: