2021 இல் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு இந்தியர்!

Sunday, September 22nd, 2019

2021 ஆம் ஆண்டுக்குள் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு முதல் இந்தியரை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அதன் தலைவர் கே.சிவன் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக தாம் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு மத்தியில் பல்வேறு குறைப்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.

பல கண்டுபிடிப்புகள், சிரமங்களுக்கும் தோல்விகளுக்கும் பின்னரேயே வெற்றிக்காண முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சந்திராயன்-2 வின் ஓடத்தில் விக்ரம் லேன்டரை தரையிறக்கும் முயற்சியில் இஸ்ரோ பின்னடைவை எதிர்நோக்கியிருப்பினும் அந்த முயற்சியில் இருந்து தாம் பின்வாங்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் தானியங்கி விண்வெளி ஓடத்தை அனுப்பி வைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இரண்டாவது தானியங்கி விண்வெளி ஓடத்தை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அனுப்பும் அதேவேளை அதே ஆண்டில் டிசம்பர் மாதத்திற்குள் மீண்டும் ஏவுகணை மூலம் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புவதற்கும் எதிர்ப்பார்த்திருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: