அடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ்!

Wednesday, September 28th, 2016

ஐ.நா. பொதுச் செயலாளர் போட்டியில் முன்னிலையில் இருக்கிறார் அன்டோனியோ குட்டெரெஸ்.

அவருடைய பயோடேட்டா இதோ வருமாறு:-இந்த ஆண்டு இறுதியில் பான் கி மூன் பதவிக் காலம் முடிவடைய இருப்பதால் ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன.

இதுவரை நடைபெற்ற 4 சுற்று போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறார் போர்ச்சுகீசிய பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ்.

  • 1949ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 தேதி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் பிறந்தார் அன்டோனியோ குட்டெரெஸ். 67 வயதான இவருக்கு கத்திரினா வாஸ் பின்டோ என்ற மனைவி இருக்கிறார்.
  • 1974ம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் அரசியல் உலகில் காலடி பதித்த இவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணி புரிந்தார்.
  • 1995ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து போர்ச்சுகீசிய நாட்டின் 114வது பிரதமராக பொறுப்பேற்றார்.
  • 1999ம் ஆண்டு 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்டோனியோ குட்டெரெஸ்,
  • 2000ம் ஆண்டு ஐரோப்பிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை வகித்தார்.
  • 2005ம் ஆண்டு ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். அகதிகள் குறித்தான பல்வேறு சீர்திருந்தங்கள் அவருடைய காலத்தில் உருவாக்கப்பட்டன.
  • முன்னதாக, 1991ல் போர்ச்சுகீசிய அகதிகள் கவுன்சிலை தொடங்கி அகதிகளுக்கான பணிகளை செய்து வந்தார்.

antonio-guterres-portugal-28-1475041972

Related posts: