உளவுத்துறை உறவை வலுப்படுத்த வேண்டும் – ரஷ்ய ஜனாதிபதி!

உளவுத்துறை அமைப்புக்களுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது என்பது ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும் விருப்பம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை மையத்திலிருந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “அமெரிக்க புலனாய்வு சேவைகளுக்கும் நேட்டோவின் உறுப்பு நாடுகளுக்கும் இடையில் இனிவரும் காலங்களில் உறவினை வலுப்படுத்துவது தொடர்பில் அனைவரும் அக்கறையுடன் உள்ளோம்” என தெரிவித்தார்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை என வரும் போது, சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச குழுக்கள் என்பன இணைந்து செயற்படுதல் அவசியம் எனவும் புடின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்தியாவும், சீனாவும் இனி வளரும் நாடுகள் அல்ல – டிரம்ப்!
தீவிர தேடுதல் நடவடிக்கை: மலேசியாவில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது!
அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல்: விசாரணைக்கு சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும்: சபாநாயகர் நான்சி பெல...
|
|