இந்தியாவும், சீனாவும் இனி வளரும் நாடுகள் அல்ல – டிரம்ப்!

Friday, August 16th, 2019


அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா கடும் வரி விதித்து, வரிவிதிப்பு மன்னனாக திகழ்வதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் அங்கு பென்சில்வேனியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர், “இந்தியாவும், சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக திகழ்கின்றன. அவர்களை இனி வளரும் நாடுகள் என கூற முடியாது. எனவே அவர்கள் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெற முடியாது” என கூறினார்.

மேலும், “அவர்கள் வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெறுகின்றனர். இது அமெரிக்காவுக்கு பாதகமாக அமைகிறது. அவர்கள் ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்து நன்மைகளை அனுபவித்து வருகின்றனர்” எனவும் கூறினார்.

Related posts: