அதிகாரபூர்வ அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்வானார்!

Tuesday, December 20th, 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தேர்தல் சபை நடந்திய வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 8ஆம் திகதி நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று தேர்தல் சபை நடத்திய வாக்கெடுப்பிலும் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வென்று இருந்தாலும் 538 பிரதிநிதிகளை கொண்ட தேர்தல் சபை கூட்டத்தில் 270 பேரின் வாக்குகளை டிரம்ப் பெற வேண்டியது கட்டாயமாக இருந்தது.

இந்நிலையில் 305 உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை டிரம்புக்கு அளித்தனர். இதனால் அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேசமயம் தேர்தல் சபை வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 232 வாக்குகள் கிடைத்தன.முன்னதாக தேர்வாளர்கள் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், ஹிலாரியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் பிரசாரம் செய்தனர்.

ஆனால் அவர்களின் போராட்டம், கோரிக்கை என அனைத்தும் வீண் போனது. எதிர்வரும் ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.

Related posts: