ஃபுளோரிடாவில் வரலாறு காணாத சூறாவளி: இரண்டு இலட்சம் பேர் இருளில்!

Saturday, September 3rd, 2016

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வரலாறு காணாத சூறாவளி காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் வரும் மிகப்பெரிய சூறாவளி இதுதான். சூறாவளி காரணமாக மின்கம்பங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளதால் லட்சக்கணக்கானோர் இருளில் தவிக்கின்றனர்.சூறாவளியால் 16 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப்படையினர் இரவு பகலாக போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மணிக்கு 80கிமீ வேகத்தில் வீசிய இந்த சூறாவளியால் கோடிக்கணக்கான் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்துள்ளன.

I00BGmm717

Related posts: