இந்தியாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து ரூபா நோட்டுகள் கொண்டுசெல்ல தடை!

Saturday, September 10th, 2016

 

ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து இந்தியாவுக்கு ரூபா நோட்டுக்கள் கொண்டு செல்ல ஐக்கிய அரபு எமிரேட் தடை விதித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பலர், இந்தியா செல்லும் போது, கணிசமான பணத்தை கையில் எடுத்து செல்கின்றனர். இதனால், விமான நிலைய சோதனையின் போது பிரச்னை எழுகிறது.விமானத்தில் பயணிப்பவர்கள், 7,500 ரூபாய் வரை பணத்தை கையில் எடுத்து செல்ல, இந்தியாவில் அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது இந்த தொகை, 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து, இந்தியா செல்பவர்கள், இனி ரூபாயை எடுத்து செல்ல வேண்டாம் என, அந்நாட்டின் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, வங்கிகளுக்கும், நாணயமாற்றம் செய்யும் நிறுவனங்களுக்கும் யு.ஏ.இ., ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. ரூபாய்க்கு பதிலாக, 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 5,000 திர்காம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு செல்பவர்கள், ரூபாயை எடுத்து சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, யு.ஏ.இ., ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.இது தொடர்பாக, இந்திய தூதரகங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

dubai+new

Related posts: